‘ரயில்ல போறதை எல்லாம் பெருமையா பேசிட்டு இருக்காரு... நாங்க பார்க்காத ரயிலா? அவருக்கெல்லாம் அரசியலை பத்தி என்ன தெரியும்? அவரு பெரிய நடிகனாக இருக்கலாம். அதுக்காக அரசியல்லயும் அவரை பெரிய ஆளா நினைக்க முடியாது. நாங்க நடத்தின உண்ணாவிரதம் நாடகம்னு இவரு எப்படி சொல்லலாம்?’ என்று ஆரம்பித்து கமலை வெளுத்து வாங்கிவிட்டார் அமைச்சர் ஜெயகுமார். ஆனால் ஸ்டாலினை பற்றி பட்டும் படாமல் மட்டும் பேசிவிட்டு அமைதியாகிவிட்டார் ஜெயகுமார். ஸ்டாலினை இப்படி லேசாக விட்டுவிட்டு கமலை எப்படி அவர் இந்த மாதிரி பதிலடி கொடுக்கிறார்?

திருச்சி கூட்டத்தில் பங்கேற்க பத்திரிகையாளர்களுடன், ரயிலில் பயணித்தார் நடிகர் கமல்  தமிழக அரசின் போலியான உண்ணாவிரதம் இருந்து தன் இயலாமையை மறைக்க முயல்கிறது. அதிமுக மத்திய அரசின் எடுபிடி போல இருக்கிறது  என தாறுமாறாக விமர்சித்தார்.

அதேபோல ஸ்டாலினும் அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தை விமர்சித்திருந்தாலும் ஆளும் தரப்பு அதை பற்றி கவலைப்படவில்லை ஆனால் கமல் விமர்சனத்தால் கடுப்பின் உச்சத்துக்கே சென்ற எடப்படியார் அமைச்சர்களுடன் பேசியிருக்கிறார். ’ஸ்டாலின் என்ன பேசினாலும் நாங்கள் அவருக்கு பதிலடி கொடுக்கிறோம், அவர் பேசினா பேசட்டும் அதுல ஏதோ அர்த்தம் இருக்கும்.  அவருக்கு அரசியல் தெரியும். எதிர்க்கட்சி தலைவரா இருக்காரு.. நம்மை விமர்சனம் பண்றாரு அதற்கு அவருக்கு தகுதி இருக்கு. ஆனால் கமலுக்கு அரசியலைப் பத்தி என்ன தெரியும்? அவர் எப்படி நம்மை நாடகம் நடத்துறோம்னு சொல்லலாம்? எப்போ பாரு நம்மகிட்ட வம்பிழுப்பதே அவருக்கு வேலையா போச்சு. அவருக்கு நான் பதில் சொல்லக் கூடாது. நீங்களே சொல்லிடுங்க...’ என்று அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டிருக்கிறார் எடப்பாடி, அதற்க்கு ஜெயக்குமாரோ நீங்க கண்டுக்காதிங்க அவருக்கு நானே பதிலடி கொடுத்துக்குறேன் என சமாதானப்படுத்தியுள்ளார்.

அப்படியே, எடப்பாடியிடம் மற்றொரு யோசயயையும் சொல்லியிருக்கிறார். அவருக்கு நாம பதில் சொல்லி பெரிய ஆளாக்கணுமா? அப்படியே கண்டுக்காம விட்டுடலாமே...’ என ஜெயகுமார் சொன்னாராம்., ஆனால் எடப்பாடியோ இல்ல பதிலடி கொடுக்கணும் அப்பறம் இதையே ஒரு பிரச்சனை பண்ணி நம்மள சீண்டுவாறு அதனால, பதில் உடனே கொடுத்திடுங்க என சொன்னாராம் எடப்பாடியார்.

ஆனால், கமல்ஹாசனோ  இது பத்தாது இன்னும் இருக்கு உங்களுக்கு என்ற தொனியில் சீண்டி வருகிறார்.