உங்களோடுதான் கூட்டணி! என்று எடப்பாடியாரிடம் ஓப்பனாகவே பி.ஜே.பி. சொல்லிவிட்ட நிலையில் அவரும், அவரது சக கொங்கு அமைச்சர்களும் ஓ.கே. என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தெற்கு மற்றும் வடக்கு அமைச்சர்கள்தான் இழுத்தடிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்று தகவல். கொங்கில் ஒருத்தர் மட்டும் இந்த முடிவை படு உக்கிரமாக எதிர்த்து நிற்கிறார்! அது யாரென்று உலகத்துக்கே தெரியும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைதான்.
 
இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களில் நடந்த ரகசிய மூவ்களின் மூலம் பி.ஜே.பி - அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் உறுதியாகிவிட்டது! என்கிறார்கள். 


கடந்த இரண்டு நாட்களில் நடந்த பரபர காட்சிகளின் ரிலே இதுதான்...

*    எடப்பாடியாருக்கு மிக நெருக்கமான அமைச்சர்கள் இருவர் வடகிழக்கு மாநிலம் ஒன்றை சேர்ந்த தொழில் அதிபருக்கு சொந்தமான விமானத்தில் ரகசியமாக டெல்லி சென்றனர்.
 
*    இவர்கள் வந்தது டெல்லி அ.தி.மு.க.வினருக்கு தெரியாது. வழக்கமாக செல்லும் தமிழகம் இல்லத்தை தவிர்த்து வேறு இடத்தில் சில மணி நேரம் பொழுதை கழித்தனர்.
 
*    பின் தமிழத்தை கவனிக்கும் மத்தியமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய நண்பரை சந்தித்து கூட்டணிக்கு தங்களில் 65% பேர் ஓ.கே. என்றும், 35% பேர் எதிர்ப்பு என்றும் சொல்லியிருக்கின்றனர். 

*    எதிர்ப்பவர்களை சரிகட்டும் வழி தங்களுக்கு தெரியும் என்று அமைச்சரின் நண்பர்  தரப்பில் தெரிவிக்ககப்பட்டதாம். 

*    பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் எட்டு சீட்கள் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு, மறுத்த அமைச்சரின் நண்பர், ‘குறைந்தபட்சம் 10 என்றால் மட்டுமே ஓ.கே. சொல்ல சொல்லி உத்தரவு.’ என்றாராம். 

*    அதிகபட்சம் ஒன்பது சீட்டுகள் பி.ஜே.பி.க்கு உறுதியாகும் என்று இறுதிக்கட்ட நிலை. 

*    இரு அமைச்சர்களும் அன்றே கிளம்பி சென்னை வந்துவிட்டனர். 

ஆனால் இரு அமைச்சர்கள் ரகசியமாக டெல்லி வந்து, கூட்டணி டீலிங்கில் இருக்கும் தகவலை எப்படியோ ஸ்மெல் செய்துவிட்ட தம்பிதுரை, கடும் கோபத்துடன் பட்ஜெட் உரையை கூட புறக்கணித்துவிட்டு கிளம்பிவிட்டாராம் டெல்லியில் இருந்து!