edappadi letter to modi



சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் 3 பேரின் உடலை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  3 மீனவர்களின் உடலை தாயகம் அனுப்பிவைக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, மீனவர்கள் பணிபுரிந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும் ஈரான் சிறையில்  வாடும் 35 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் எடப்பாடி  பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.