இன்றைய தினம் நான் டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. தமிழக அரசு உயர்க் கல்வி துறைக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டுவருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஏ.சி சண்முகம் நடத்திவரும் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்புத் துறை செயலாளர் சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை இயக்குனர் ராஜா சபாபதி, நடிகை ஷோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏ.சி. சண்முகம் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

