துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த துணை ஜனாதிபதியின் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது.  இதையடுத்து எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனாகிய கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை நிறுத்தியது.

இதைதொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடுவை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை ஜூலை 18 ஆம் தேதி கோபால கிருஷ்ண காந்தியும் வெங்கையா நாயுடுவும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் வெங்கையா நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நாளை மறுநாள் வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.