edappadi arranged a secret intelligence to watch mla
நான்கைந்து எம்.எல்.ஏ க்கள் சேர்ந்து வந்தாலே, அமைச்சர் பதவி கேட்டுதான் பிளாக் மெயில் செய்வார்கள் என்பது, முதல்வர் எடப்பாடியின் அண்மைக்கால அனுபவம்.
ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ க்கள், எம்.பி க்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும், தேவையான அளவுக்கு, கொட்டி கொடுக்கப்பட்டுதான் வருகிறது.
இருந்தாலும், அமைச்சர் பதவி கேட்டு அவர்கள் கொடுக்கும் குடைச்சல், முதல்வரை நிம்மதி இழக்க செய்து விட்டது. இதனால், வெறுத்து போன அவர், ஜெயலலிதாவின் பாணியை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்.
ஜெயலலிதா ஆட்சியில், காவல் துறையில் உளவு துறை என ஒன்று, தனியாக இயங்கினாலும், ரகசியமாக, வடமாநிலத்தை சேர்ந்த தனியார் உளவு நிறுவனம் மூலம், எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள் என அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள்.
.jpg)
அவர்களை கண்காணிக்கும் நிறுவனம் எது? என்று யாருமே கண்டுபிடிக்க முடியாத வகையில் மிகவும் ரகசியமாக இருக்கும். அவர்கள் கண்டு பிடித்து, அதற்கான ஆதாரங்களை எல்லாம் கொடுத்த பின்னரே, உளவுத்துறை போலீசாருக்கு அது வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படியே, கடந்த 2011 ம் ஆண்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள், வழக்குகளையும், காவல்துறை விசாரணையையும் சந்தித்தனர்.
அதே பாணியை பின்பற்றி, தம்மை அமைச்சர் பதவி கேட்டு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் எம்.எல்.ஏ க்களை, தனியார் உளவு நிறுவனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளார் எடப்பாடி.
அதனால், நான்கைந்து எம்.எல்.ஏ க்கள் சந்தித்து பேசினாலே, அது எடப்பாடியின் கவனத்திற்கு சென்று விடுகிறது. அதேபோல் அவர்களுடைய செல்பேசி மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் முதல்வருக்கு தெரிந்து விடுகிறது.
அத்துடன், பல சிக்கலான விஷயங்களும் ஆதாரங்களுடன் முதல்வருக்கு வந்து சேருவதால், முன்பு போல எம்.எல்.ஏக்களால், முதல்வர் எடப்பாடியை அமைச்சர் பதவி கேட்டு பிளாக் மெயில் செய்ய முடியவில்லை என்ற விரக்தி அவர்களை ஆட்டி படைக்கிறது.
.jpg)
தம்மை ரகசிய உளவு நிறுவனம் கண்காணிக்கிறது என்பதை அறிந்து கொண்ட எம்.எல்.ஏ க்களால், கண்காணிக்கும் நபர்களை மட்டும் அடையாளம் காண முடியவில்லை. இதனால், எதுவும் செய்ய முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
எனினும், இந்த உளவு பார்க்கும் விவகாரத்தை மேற்கொண்டு வருவது, முதல்வரா? அல்லது சசிகலா தரப்பா? என்ற சந்தேகமும் எம்.எல்.ஏ க்களுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
