அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய வலியுறுத்தி  புதுச்சேரி அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.  இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் மனசாட்சி என்றே பலராலும் அவர் வர்ணிக்கப்பட்டார். அந்த அளவிற்கு ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட்டு அவரின் நன்மதிப்பைப் பெற்றவர் அவர். அதனாலேயே இரண்டு முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதே செல்வாக்குடன் இருந்தும், அவர் நடத்திய தர்ம யுத்தத்தால் முதல்வராகும் வாய்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பழனிச்சாமி, இன்று மொத்த கட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இது பழனிச்சாமி அரசியல் எழுச்சியாகவும், ஓபிஎஸ்சின் வீழ்ச்சியாகவுமே பார்க்கப்பட்டுகிறது. சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்ததே ஓ.பன்னீர் செல்வத்தின் கையிலிருந்து வாய்ப்பு பரிபோனதற்கு காரணமென அவரின் ஆதரவாளர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

தனது சுயநலத்திற்காக பல ஆண்டுகளாக உடன் இருந்த விசுவாசிகளையே விட்டுக் கொடுத்தவர் பன்னீர்செல்வம் என்ற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது. ஜெயலிதாவுக்கு சிறந்த விசுவாசியாக இருக்கலாம், ஆனால் அவர் சிறந்த அரசியல்வாதி அல்ல, எடப்பாடி பழனிச்சாமி சிறந்த அரசியல்வாதி என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் செல்வாக்கு மங்க தொடங்கியுள்ளது. தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் இல்லாதவர் தற்போது அதையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்த கட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி கைக்கு செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கான அனைத்து வேலைகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் தனக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்துகொண்ட ஓபிஎஸ், தான் அந்த ஒற்றைத் தலைமையான இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள ஓபிஎஸ் பொதுக்குழுவை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் சில காரணங்களுடன் வெளிப்படையாக கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பொதுக்குழு நடந்தே தீரும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உறுதியாக இருந்து வருகின்றனர். பொதுக்குழுவை எப்படி தடுத்து நிறுத்துவது,எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குத் தலைமை ஏற்பதை தடுக்க என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஓபிஎஸ் ஒருபுறம் இருந்துவரும் நிலையில், புதுச்சேரி மாநில அதிமுகவினர் அதிமுகவின் ஒற்றைத் திறமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யவேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருப்பது ஓபிஎஸ்க்கு பேரிடியாக விழுந்துள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொது.செயலாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது குறித்து பேட்டி கொடுத்துள்ள அவர், இரட்டைத் தலைமையால் கட்சியின் பல்வேறு முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கட்சி வேகமாக செயல்பட ஒற்றைத் தலைமை தேவை, இதில் திமுகவை உறுதியாக எதிர்த்து வரும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையாக இருக்க வேண்டும். அதிமுகவில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழக முதல்வரை சந்தித்தது, அவர்கள் செயல்பாடு நன்றாக இருக்கிறது எனக் கூறியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த விடாமல் நீதிமன்றம் மூலம் தடை பெற நினைப்பவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள். அவர்கள் கட்சியில் இருந்து விளக்கப்பட வேண்டும், என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவு வலுவாக உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி திமுகவுன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஓபிஎஸ்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.