"ஜெ" வின் நினைவிடம் மிக உறுதியாக கட்ட வேண்டும்..! முதல்வர் எடப்பாடி கண்டிஷன்..!
ஜெயலலிதாவின் அவர்களின் நினைவிடத்தை மிக உறுதியாக கட்ட வேண்டும்! பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க வேண்டிய கட்டிடம் இது. அதனால் அவசரம் காட்டாமல், தரத்துடன் பணிகளை செய்ய வேண்டும். அதேவேளையில், தான் இப்படி சொல்லிட்டேனே என்பதற்காக தாமதமும் செய்யாதீங்க! என்று பொதுப்பணித்துறையினருக்கு முதல்வர் இ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
"ஜெ" வின் நினைவிடம் மிக உறுதியாக கட்ட வேண்டும்..! முதல்வர் எடப்பாடி கண்டிஷன்..!
* ஜெயலலிதாவின் அவர்களின் நினைவிடத்தை மிக உறுதியாக கட்ட வேண்டும்! பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க வேண்டிய கட்டிடம் இது. அதனால் அவசரம் காட்டாமல், தரத்துடன் பணிகளை செய்ய வேண்டும். அதேவேளையில், தான் இப்படி சொல்லிட்டேனே என்பதற்காக தாமதமும் செய்யாதீங்க! என்று பொதுப்பணித்துறையினருக்கு முதல்வர் இ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளார். - பத்திரிக்கை செய்தி
* மக்களிடையே வெறுப்பு அரசியல் பிரசார்த்தை பரப்பியும், ஜாதி மத ரீதியிலான கலவரங்களை உருவாக்கியும், வெற்றி பெற துடிக்கிறது தி.மு.க. எனவே மக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போதே தனது 37 எம்.பி. தொகுதிகளில் பணத்தை தி.மு.க. இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
- டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)
* மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை, முதலீடுகள் இல்லை, வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர்கள் வேலை இழப்பு! என அனைத்து நிலைகளிலும் இந்திய பொருளாதாரம் சரிந்து கொண்டே இருக்கிறது. நிதிப்பற்றாக்குறையானது பட்ஜெட் மதீப்பீட்டை விட அதிகரித்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி எழும் கடும் விமர்சனங்களை திசை திருப்பவே மதவாத அரசியலை தீவிரப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர் மோடி - அமித்ஷா இருவரும்.
- கே.எஸ்.அழகிரி (தமிழக காங்., தலைவர்)
* பெண்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். டில்லி ஷாஹீன் பாக் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை ரோட்டில் அமர வைத்தனர் போராட்டத்தை தூண்டிய அரக்கர்கள். எப்போதுமே கலவரத்தில் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். கலவரத்தை தூண்டிய சதிகாரர்கள் தப்பி விடுகின்றனர்.
- உமாபாரதி (மாஜி மத்தியமைச்சர்)
* குடியுரிமைத் திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மாறாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்துள்ள, அந்நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும். டில்லியில் நடந்த கலவரத்தின் பின்னணியில் பெரும் சதி உள்ளது. இதைக் கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- கிஷன் ரெட்டி (மத்திய உள்துறை இணையமைச்சர்)
* தமிழகத்தில் கட்சி துவக்கப் போவதாக கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த், முதலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பேசி வந்தார். இப்போது அவர் மனநிலையில் மாற்றம் தென்படுகிறது.
- நாராயணசாமி (புதுவை முதல்வர்)
* சிறுபான்மையினருக்கு எதிராக எந்த சட்டம் வந்தாலும் அதை எதிர்த்து தி.மு.க.தான் முதல் குரல் கொடுக்கும். குடியுரிமைச் சீர்திருத்த சட்டமசோதா விவகாரத்திலும் இதுதான் நிலை. ஆனால், இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்துள்ளது. ஆனால் இப்போது ‘எந்த பாதிப்பும் வராது’ என மக்களிடம் நாடகம் ஆடுகிறது.
- கனிமொழி (தி.மு.க. எம்.பி.)
* நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைவது அவரவர் உரிமை. அவர்கள் செய்வது பற்றியெல்லாம் எங்களுக்கு எந்த கவலையுமில்லை. தி.மு.க. வேண்டுமானால் இவர்கள் இருவரின் நடவடிக்கையை பார்த்து பயப்படலாம். எங்களுக்கு 1.5 கோடி தொண்டர்கள் உள்ளனர்.
- ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)
* தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் ஐம்பது சதவீதம் தமிழ்தான் இடம் பெற வேண்டும். இதற்கான சட்டங்கள் இங்கு உள்ளன. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
- மாஃபா பாண்டியராஜன் (தமிழக அமைச்சர்)
* எம்.ஜி.ஆர். முதல்வரானதும் எல்லா நடிகனுக்குமே அந்த ஆசை வந்துள்ளது. அதற்கு அருகதை இருக்கா இல்லையா என்று எவனும் பார்ப்பது கிடையாது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து, முதல் கூட்டம் நடத்தி, அடுத்த கூட்டத்திற்கு போவதற்குள் ‘காலி’யாகிவிடுவார். அவரது உடம்பு கண்டிஷன் அப்படி.
- ஆர்.சுந்தர்ராஜன் (நடிகர், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்)
: விஷ்ணுப்ரியா