2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க இருந்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதால் சசிகலா  சிறைக்கு செல்ல நேரிட்டது அப்போது முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி...

அப்போது  முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக, ஆளுநர் வித்யாசாகர் ராவ்  சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தார்.அதில் அதிமுக, அதிக இடத்தை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இது  முதல் டர்னிங் பாய்ன்ட்

பின்னர் எடப்பாடியே முதல்வராக தொடர்ந்தார். அந்த சமயத்தில் இன்னொரு பக்கம் பன்னீர்  செல்வம் தர்மயுத்தத்தில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில்,18 எம்எல்ஏ நீக்கம் வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த  தீர்ப்பில் ஒரு வேலை தினகரனுக்கு ஆதரவாக தகுதீநீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்திருந்தால்  தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

ஆனால் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை  தக்க வைத்துக்கொண்டுள்ளார் எடப்பாடி...இது இரண்டாவது டர்னிங் பாயின்ட்.இதிலிருந்து முதல்வர் எடப்பாடி நல்ல ராசியான நபர் என்று அனைவரும் முதல்வரை பற்றி  கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடக்குமா இடைத்தேர்தல்..? 

மொத்தம் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால், அதில் அதிமுக 10   இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும்...இல்லை என்றால் ஆட்சிக்கு ஆபத்து வரும் நிலை உருவாகும் அது சரி அப்படியே இடைத்தேர்தல் அறிவித்தாலும், அது எப்போ அறிவித்து..எப்போ  தேர்தல் நடந்து...அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என தீர்மானித்து ஆட்சிக்கு ஆபத்து வருமா  என்று எதிர்கட்சிகள் மற்றும் தினகரன் தரப்பு எதிர்பார்த்தாலும், இப்படியே இன்னொரு வருடம் சென்று விடும் என பலரும் பேசுகின்றனர். 

இதிலிருந்து எடப்பாடி அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக பார்க்கப்படுகிறது.

அதில் அதிமுகவுக்கு பெருவாரியான இடங்கள் கிடைக்காவிட்டால், அதாவது குறைந்தது 10 இடங்களிலாவது வெற்றி பெறாமல் போய்விட்டால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடும்... ஒரு வேளை வெற்றி பெற்று விட்டால், அது எடபாடிக்கு 3 ஆவது டர்னிங் பாய்ண்டாக அமையும்.