Asianet News TamilAsianet News Tamil

திமுகவை ஓங்கி அடித்த எடப்பாடியார் .!! ஆர். எஸ் பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!!

வேண்டுமென்றே அரசின் மீது திட்டமிட்டு தவறான பிரச்சாரத்தை செய்து அதில் அனுதாபம் தேடும்  முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.  அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை இழிவுபடுத்திப் பேசியதற்கு போலீசார் அவரை கைது செய்துள்ளனர், 

edapadi palanichamy replay mk stalain about rs bharathy arrest
Author
Chennai, First Published May 23, 2020, 12:51 PM IST

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் கைதுக்கும் அரசுக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். அவர் பட்டியலின சமூதாயத்தை இழிவு படுத்தி பேசியதால் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் . இதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஒரு மாயை ஏற்படுத்தி அனுதாபம் தேட முயற்சி செய்கிறார் என முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ் பாரதி , மாநிலங்களவை உறுப்பினரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது தலித் மக்கள் இன்றைக்கு  நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார் , அவர் பேசும்போது திமுக ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுமளவிற்கு அந்த தைரியத்தை தந்தது யார்.?  நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம் ,

 edapadi palanichamy replay mk stalain about rs bharathy arrest

இந்தியாவிலேயே தமிழகம் தலை சிறந்த மாநிலமாக இருக்கிறது என்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வடமாநிலத்துல இருக்கிறவனுக்கு அறிவே கிடையாது... ஓபனாக சொல்கிறேன் , ஒரு அரிஜன் கூட மத்திய பிரதேச ஐகோர்ட்டில் ஜாட்ஜாக கிடையாது. தமிழகத்தில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வரதராஜனை நீதிபதியாக உட்கார வைத்தார், அதன்பிறகு ஏழு , எட்டு  ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என கூறியிருந்தார்.இது ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திராவிட இயக்கம் போட்ட பிச்சை என அவர் கூறியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது , தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ் பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிவந்த நிலையில் , இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் இதை அதிமுக அரசு திமுகவை பழிவாங்கும் நோக்கிலும் ஆர்.எஸ் பாரதி ஆளுங்கட்சியின் ஊழல்களை அம்பலபடுத்தி வருகிறார் என்பதாலும் அவர் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை இது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் . 

edapadi palanichamy replay mk stalain about rs bharathy arrest

இந்நிலையில்  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ,   திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , மதுரையைச் சேர்ந்த ஆதித்தமிழர் பேரவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தங்கள் பட்டியல் இனத்தை இழிவு படுத்தி பேசியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,  அது மிக வேடிக்கையாக உள்ளது , பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்  தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இதற்கும் அரசுக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை , ஆனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வேண்டுமென்றே அரசின் மீது திட்டமிட்டு தவறான பிரச்சாரத்தை செய்து அதில் அனுதாபம் தேடும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .  ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை இழிவுபடுத்திப் பேசியதற்கு போலீசார் அவரை கைது செய்துள்ளனர், 

edapadi palanichamy replay mk stalain about rs bharathy arrest

இதற்கும் அரசுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.?  ஒரு சமூதாயத்தை இழிவுபடுத்தி பேசியதற்கு கட்சித் தலைவர் என்ற முறையில் அவரை கண்டித்திருக்க வேண்டும் அதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு.  ஆனால்  ஆர்.எஸ் பாரதி ஏதோ ஊழல்களை கண்டுபிடிக்கும் மிகப்பெரிய விஞ்ஞானி போலவும் அவர் அதிமுக மீது ஊழல் புகார் செய்ததால் அவரை அரசு திட்டமிட்டு கைது செய்தது போலவும் திமுக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது . ஊடகங்களும்  உண்மைத் தன்மை அறிந்து செய்தி வெளியிட வேண்டும்  அதில் என்ன உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும் இது அனைத்தும் திமுக  திட்டமிட்டு செய்யும் அரசியல் நாடகம் என அவர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios