Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவை பீட் செய்த எடப்பாடி பழனிச்சாமி...

எந்த முடிவாக இருந்தாலும் , எத்தனை பேர் எதிர்த்தாலும் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து எதையும் சாதிப்பவர் என்று பெயரெடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு நிகர் அவரே என்றும் சொல்லப்பட்டவர். ஆனால் அவரை போலவே தானும் பெயரெடுக்க  வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

edapadi overcome  jayalalitha
Author
Chennai, First Published Aug 13, 2019, 4:50 PM IST

கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதாவுக்கு நிகராக தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.edapadi overcome  jayalalitha


எந்த முடிவாக இருந்தாலும் , எத்தனை பேர் எதிர்த்தாலும் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து எதையும் சாதிப்பவர் என்று பெயரெடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு நிகர் அவரே என்று சொல்லப்பட்டவர். ஆனால் அவரை போலவே தானும் பெயரெடுக்க  வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

அதற்கான உதாரணங்கள் சிலவற்றை கூறமுடியும்:-
சமீபத்தில் கட்சிக்கும்,  ஆட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்ற புகாரில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவிபறிக்கப்பட்டுள்ளது, பலர் அவசரப்பட வேண்டாம் என சொல்லியும் கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் கட்சிக்கு தேவையேயில்லை என்றமுடிவில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது, தற்போது மன உறுதியில் ஜெயலலிதாவுக்கு நிகராக வைத்துபேசப்படுகிறார் பழனிச்சாமி. அது மட்டுமல்லாமல்  ஜெயலலிதாவைப்போலவே அதிரடியாக பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார்

edapadi overcome  jayalalitha

குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை, தமிழகத்தில் தொழில் தொடங்கவைக்கும் நோக்கில்,  இங்கிலாந்து நாட்டிற்கு சுமார் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அறிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்பட உள்ள கால்நடை பூங்காக்களை மேம்படுத்த, வெளிநாட்டு கால்நடை ஆராய்ச்சி  நிலையங்களுக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறையில் நவீன முறையில் சிகிச்சைகள் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள போவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். அதன் மூலம் மக்களுக்கு உயர்தர சிகிச்சைகள்  வழங்க முடியும் எனவும் அவர்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

edapadi overcome  jayalalitha
இதுமட்டுமல்லாமல் டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக உடனே மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையையும் உடனே பரிசீலித்து பாசனத்திற்காக அணை திறக்க உத்தரவிட்டுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரியில் சேதத்தை கணக்கிட்டு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.இப்படி தொடர்ந்து 24 மணி நேரமும் தமிழக அரசியலில் பிசியாக தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் பழனிச்சாமி, இதுமட்டுமல்லாமல், அரசியல்  ரீதியாக எதிர்க்கட்சியினர்  வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதாக இருந்தாலும் சரி, மக்களின் தேவை சார்ந்து எழும் கோரிக்கைகளாக இருந்தாலும் சரி  அனைத்திலும் விழிப்புடன் இருந்து உடனே செயலாற்றக்கூடிய முதலமைச்சர் என்று தமிழக மக்களிடம் பெயரெடுத்துள்ளார்   எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவையும் அதிமுக அரசையும் வழி நடத்துவதற்கு ஆளுமை திறன் கொண்ட தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தன்னுடைய எளிமையான அனுகுமுறைகளின் மூலமாகவும், கடின உழைப்பின் காரணமாகவும், அவ் விமர்சனங்களை எல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார்.ஆளுமை திறன் கொண்ட முதலமைசசார் என்பதையும் தொடர்ந்து அவர் நிரூபித்து வருகிறார் என்றால் மறுப்பதற்க்கில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios