Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினை காப்பாற்ற நினைக்குது எடப்பாடியார் அரசு, அது கூடாது!?: போட்டுப் பொளக்கும் பா.ஜ.க. புள்ளி

ரஜினிகாந்த் எனும் அரிதார ஆளுமையை வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் பிரச்னைகள்  தீப்பிடித்த பனைமரம் போல் தகதகவென எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் ஸ்டாலினுக்கு எதிரான அலைகளும் ஆர்ப்பரிப்போடு அடிக்கத்தான் செய்கிறது. 
 

edapadi government try to safe mk stalin?
Author
Chennai, First Published Jan 31, 2020, 7:45 PM IST

ரஜினிகாந்த் எனும் அரிதார ஆளுமையை வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் பிரச்னைகள்  தீப்பிடித்த பனைமரம் போல் தகதகவென எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் ஸ்டாலினுக்கு எதிரான அலைகளும் ஆர்ப்பரிப்போடு அடிக்கத்தான் செய்கிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பா.ம.க. நிறுவனரான டாக்டர். ராமதாஸ் ’தி.மு.க.வின் அதிகார்ப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் அமைந்திருப்பது தலித்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம்தான். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அபகரிப்பு நிகழ்ந்தது நிரூபணமானால், ஸ்டாலின் அரசியலை விட்டு விலக தயாரா?’ என்று ஒரு வெடியை கொளுத்திப் போட்டார். 

edapadi government try to safe mk stalin?

இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. தி.மு.க. அந்த புகாரை மறுத்தது மேலும் சட்டரீதியாக இதை அணுக துவங்கியது. கூடவே வன்னியர் சமுதாய கல்வி அறக்கட்டளை! எனும் பல நூறு கோடி ரூபாய் சொத்தானது சமீபத்தில் டாக்டர். ராமதாஸ் பெயரில் மாற்றப்பட்டது. சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இந்த விவகாரத்தை மையப்படுத்தி பல முக்கிய உண்மைகளை வெளியிட போவதாக தி.மு.க. அறிவித்தது. ’இது உண்மையாகையில், ராமதாஸ் அரசியலை விட்டு விலக தயாரா?’ என்று எதிர்சவாலும் விட்டார் ஸ்டாலின். ஆனால் இப்படி இரு தரப்பும் வாய்ச்சண்டைதான் போட்டுக் கொண்டு இருக்கின்றனவே தவிர, களமிறங்கி எது உண்மை என்பதை நிரூபிக்கவில்லை. 

இந்த நிலையில் இந்த பிரச்னையை ‘இரு தரப்புக்குமே இதில் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய அக்கறையும், பொறுப்பும் இல்லை. வெறும் அரசியல் லாபத்துக்கான நாடகம், மிரட்டலாகவே எடுத்துக் கொள்கின்றனர்.’ என்றார்கள். 

edapadi government try to safe mk stalin?

இந்த நிலையில் பெரியார் - ரஜினி விவகாரம் தொடர்பாக பேட்டியளித்திருக்கும் பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினரான தடா பெரியசாமி “பஞ்சமில் நிலத்தில் முரசொலி அலுவலகம் எனும் பிரச்னை தொடர்பாக டெல்லிக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன். டாக்டர் ராமதாஸ் கொளுத்திப் போட்ட இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எஸ்.சி. ஆணையத்தில் பொய்யான தகவல்களை அளித்து வருகிறார்கள். அங்கே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, வாக்குச்சாவடி மையம் இருந்ததற்கான சான்றுகள் விரைவில் வெளியிடப்படும். ஆளும் அ.தி.மு.க. அரசாங்கமானது, ஸ்டாலினுக்கு இந்த விஷயத்தில் எந்த உதவியும் செய்யக்கூடாது. விரைவில் நான் முழு உண்மைகளையும் கொண்டு வருவேன் வெளியே.” என்று தடதடத்திருக்கிறார். 

எடப்பாடியாரின் நிர்வாகம், ஸ்டாலினுக்கு உதவுதா?!
சர்தான்!

Follow Us:
Download App:
  • android
  • ios