ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியது. அந்த சொத்துக்களில் டெல்லியில் உள்ள ஜோர்பாக் பகுதியில் அமைந்திருக்கும் வீடும் ஒன்று.

 

சென்ற ஆண்டு இந்த வீட்டை அமலாக்கத்துறை முடக்கியது. ஆனால் இதுவரை கார்த்தி சிதம்பரம் அந்த வீட்டிலிருந்து வெளியேற வில்லை. இந்த நிலையில் வரும் 10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யும்படி அமலாக்கத்துறை கெடு விதித்து உள்ளது. இந்த வீடு கார்த்தி மற்றும் அவரது தாய் நளினி சிதம்பரத்தின் பெயரில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று அனுப்பப்பட்ட நோட்டீசில் படி இன்று முதல் 10 நாட்களுக்குள் கார்த்தி டெல்லி வீட்டை காலி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கார்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ மேற்கொண்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Read more: 1979 ஆம் ஆண்டு - 2019 ஆம் ஆண்டு சீக்ரெட் விஷயம் தெரியுமா..? அத்தி வரதரை நிற்க வெச்சுட்டாங்க...

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டித்து இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் பத்து நாட்களுக்குள் வீடும் காலி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது