40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக அற்புத நிகழ்வான அத்திவரதர் வைபவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் 24 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளிப்பார் அத்தி வரதர்.

ஆனால் இந்த முறை மட்டும் சிலையின் உறுதி தன்மையை பொறுத்து, ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அதாவது 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சி அளிப்பார்.

வரும் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக 2,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தியுள்ளனர்.

Read more: சென்னை மக்களே..! 10 வருட கஷ்டம் நீங்கப்போகுது.. இனி உங்களுக்கு வசந்தகாலம் தான்..!

40 ஆண்டுகளுக்கு முன்பாக 1979 ஆம் ஆண்டு எந்த பீடத்தின் மீது அத்தி வரதர் நிறுத்தப்பட்டதோ, அதே பீடத்தின் மீதுதான் தற்போது அத்திவரதர் நிறுத்தப்பட்டுள்ளார் என்பது சிறப்பான அம்சம்.