நாட்டின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகச் சரிந்துவிட்டது, முக்கிய 8 துறைகளின் உற்பத்தியும் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. ஆட்டோமொபைல் துறையில் விற்பனைக் குறைவு ஏற்பட்டு, தொடர்ந்து 10-வது மாதமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை சரிந்துள்ளது. மாருதி, அசோக்லேலண்ட் நிறுவனங்கள்கூட உற்பத்தி இல்லா நாள் அறிவித்துள்ளன.

நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதில் இருந்து மீட்க மத்தியஅரசு ஸ்திரமான நடவடிக்ைககளை எடுக்க வேண்டும் என்று  எதிர்ககட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவும், சரிவில் இருந்து மீட்கவும் மத்தியஅரசுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 6 அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நாளேடுகளில் கூறி சப்பைக் கட்டு கட்டுவதை விட்டு, புத்திசாலித்தனமாக நடந்து சரிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்க என்ன வழி என்பதை காண வேண்டும். இந்த சரிவில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அனைத்தையும் மறுக்கும் மனநிலையில் இருந்துமோடி அரசு விடுபட்டு அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இப்போதுள்ள சுழற்ச்சிமந்தநிலை, கட்டமைப்பு மந்தநிலையில் இருந்து விடுபட வேண்டும்.இதை சரியாக உணர்ந்து செயல்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரம் மீண்டும் உயர்ந்த நிலைக்குச் செல்லும்.

1.எளிமையான ஜிஎஸ்டி:
 ஜிஎஸ்டி வரியில் இப்போது இருக்கும் அனைத்து குளறுபடிகளையும் நீக்கி எளிமைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு குறுகியகாலத்துக்கு மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் ஆனால், சரியாகிவிடும்.

2.வேளாண் சீர்திருத்தம்
புதியவழிகளை கண்டுபிடித்து வேளாண்துறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும், கிராமப்புற பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. கிராமமக்கள் செலவுசெய்யும் திறன் குறைந்துள்ளார்கள். அவர்களை திறனை அதிகரிக்க திட்டம் தயாரிக்க வேண்டும்

3.முதலீட்டு உருவாக்கம்.

முதலீட்டு உருவாக்கத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், வங்கிகளை மட்டும் மக்கள் சார்ந்தருக்காமல் வங்கி அல்லாத நிறுவனங்களையும் நாடிச் செல்ல வேண்டும். அதற்கு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படவேண்டும்.

4. வேலைவாய்ப்பை உருவாக்கி தூண்டிவிடுதல்

நாட்டில் வேலைவாய்ப்புகள் முடங்கி இருக்கிறது, அதை தூண்டிவிட வேண்டும். ஜவுளித்தொழில், ஆட்டோமொபைல், உற்பத்தி,தொழில்துறை, சிறுதொழில் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளித்து வேலைவாய்ப்பை தூண்ட வேண்டும். வீடுகட்டுதலை ஊக்கப்படுத்தும் போது ஏராளமானோருக்கு வேலை கிைடக்கும். குறிப்பாக எம்எஸ்எம்இ துறையை வலுப்படுத்த வேண்டும்.

5. ஏற்றுமதிக்கு ஊக்கம்

 நாட்டின் ஏற்றுமதிைய அதிகப்படுத்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடக்கும் போது, நமக்கான ஏற்றுமதியை அதிகரிக்க வழிகளை காண வேண்டும்.

6. உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல்

நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளை அதிகப்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைகிடைக்கும். சமூக நலத்திட்டங்களுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்கும் அரசு செலவு செய்யும்போது அந்த பணம் தொழிலாளர்களுக்குவந்து அதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும். பொருளாதார சுழற்சியில் மாற்றம் உண்டாகும்
இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தா்