Dushyant Dave Appear at High court

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் எந்த கட்சிக்கும் செல்லவில்லை, கட்சி தாவல் தடை சட்டம் பொருந்தாது. கட்சி தடை தாவல் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் டிடிவி ஆதரவாளர்கள் கடிதம் கொடுத்தனர்.

இது தொடர்பாக, விளக்கமளிக்க வேண்டும் என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம்செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

டிடிவி தினகரன் சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடி வருகிறார். அப்போது, தமிழகத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை டெல்லியில் உள்ள சிலர் தீர்மானிக்கின்றனர். 

மத்தியில் இருப்பவர்கள் சபாநாயகரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். சபாநாயகராக செயல்படாமல் கட்சிக்காரராக செயல்படுகிறார். 18 எம்எல்ஏக்கள் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. கட்சி தாவல் தடை சட்டம் பொருந்தாது. கட்சி தடை தாவல் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று மட்டுமே ஆளுநரிடம் கடிதம் அளித்தனர் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடி வருகிறார்.