கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது சகோதரிகளுடன் காசிக்கு சென்று வழிபட்டு வந்தது அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுகவினர் ஊருக்குதான் உபதேசம் பண்ணுவார்கள். ஆனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வார்கள் என நெட்டிசன்கள் இதனைக் கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் ஸ்டாலின் மனைவி துர்கா கடந்த வாரம் காசிக்கு சென்று  மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈமக் காரியங்கள் செய்து வந்தாக கூறப்படுகிறது.

கருணாநிதியும், ஸ்டாலினும் நாத்திகர்களானாலும் அவர்களது குடும்பத்தினர் கோவில், குளங்களுக்கு சென்று வருவதை அவர்கள் தடுத்ததில்லை. குறிப்பாக துர்கா ஸ்டாலின்  அபாரமான கடவுள் நம்பிக்கை  கொண்டவர். இவர் அடிக்கடி கோவில்களுக்குச் சென்று வருவார்.

இது தொடர்பான விமர்சனங்களை அவர் கண்டு கொள்வதே இல்லை. இந்நிலையில்தான் கடந்த வாரம் காசிக்குச் சென்ற துர்கா மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சில சடங்குகளை செய்துள்ளார்.

பொதுவாக இறந்தவர்களின் வாரிசுகள்தான் சடங்கு காரியங்களை  செய்ய வேண்டும். ஆனால் இதற்கு ஸ்டாலின் சம்மதிக்காததால் , ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் மாமனாருக்கு மருமகள்கள் காரியம் செய்யலாம் என்ற அடிப்படையில், அவர் காசிக்குனு சென்று இறுதிக் காரியங்களை செய்துள்ளார்.

இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.