தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? என துரைமுருகனுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடின் பழனிசாமி அறிவிப்பு விடுத்திருந்தார். ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்றால் வேலூர் மாவட்டம் முழுவதும் திமுக பெரும் போராட்டம் நடத்தும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்புத் தெரிவித்தார். இதர்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. 

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ’’தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது? இவர்களே இப்படி கூறினால், கர்நாடகத்தில் இருந்து மட்டும் எப்படி தண்ணீர் தருவார்கள். தமிழகத்திற்கு உள்ளேயே தண்ணீர் பிரச்சினையை திமுக எழுப்புவது கண்டிக்கத்தக்கது’’ என அவர் தெரிவித்துள்ளார்.