Asianet News TamilAsianet News Tamil

பொதுச்செயலாளராக தேர்வானதும் மு.க.அழகிரிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த துரைமுருகன்... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி..!

பொறுமையாக இருங்கள்... நல்லதே நடக்கும் என துரைமுருகன், மு.க.அழகிரியிடம் கூறியிருப்பது க்ரீன் சிக்னலா..? அல்லது வழக்கமான ஆறுதல் வார்த்தைகளா? என்பது அந்த முருகப்பெருமானுக்கே வெளிச்சம்..!


 

Duraimurugan who gave the green signal to MK Alagiri when he became the General Secretary
Author
Tamil Nadu, First Published Sep 5, 2020, 1:59 PM IST

திமுக பொதுச்செயலாளர், பொருளாளராக முறையே துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் முதல் ரஜினிகாந்த் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கட்சியை விட்டு ஓரம்கட்டி வைக்கப்பட்டு, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மன்றாடி வரும் மு.க.அழகிரி, துரைமுருகனை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருப்பதுதான் தற்போது அறிவாலயத்தில் ஹாட் டாபிக்.Duraimurugan who gave the green signal to MK Alagiri when he became the General Secretary

 முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துரைமுருகனுக்கு போன் போட்டு வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார். அப்போது வெகுநேரம் இருவரும் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. "நல்லதே நடக்கும்... பொறுமை காத்து இருங்கள்..’’ என மு.க.அழகிரியிடம், துரைமுருகன் கூறியுள்ளார். 

பொதுவாகவே துரைமுருகன் மீது கருணாநிதி குடும்பத்தினருக்கும், இவர்களது குடும்பத்தினர் மீது துரைமுருகனுக்கும் கட்சி கடந்த பாசம் எப்போதும் நிரம்பி வழியும். எந்த விஷயமானாலும் இருதரப்பினரும், உரிமையுடனும், ஒளிவுமறைவின்றியும் பகிர்ந்து கொள்வதுண்டு. கட்சியை விட்டு விலகி இருந்தாலும் துரைமுருகனோடு தொடர்பில் இருந்து வருகிறார் மு.க.அழகிரி. அந்த வகையில் அழகிரிக்கு அவ்வப்போது துரைமுருகன் ஆறுதல் சொல்வதுண்டு.

Duraimurugan who gave the green signal to MK Alagiri when he became the General Secretary

மு.க.அழகிரி திமுகவை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த போதும் அது பற்றி செய்தியாளர்கள் கேட்டால் துரைமுருகன் அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கடந்து போய்விடுவார். அழகிரியை பற்றி விமர்சிக்க மாட்டார். 

அது பழைய பாசம்... பற்று. ஆனால் பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ள துரைமுருகன், மு.க.அழகிரியிடம், ’’நல்லதே நடக்கும்... காத்து இருங்கள்...’’ என்பது தான் அறிவாலய வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தனைக்கும் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவை அழைத்து மு.க.அழகிரி வாழ்த்து சொல்லவில்லை. Duraimurugan who gave the green signal to MK Alagiri when he became the General Secretary

பொறுமையாக இருங்கள்... நல்லதே நடக்கும் என துரைமுருகன், மு.க.அழகிரியிடம் கூறியிருப்பது க்ரீன் சிக்னலா..? அல்லது வழக்கமான ஆறுதல் வார்த்தைகளா? என்பது அந்த முருகப்பெருமானுக்கே வெளிச்சம்..!

 

Follow Us:
Download App:
  • android
  • ios