இடிஞ்ச மசூதியை வைத்து அரசியல் நடத்துபவர்கள் தான் பாஜகவினர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் “பிணத்தை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் திமுகவினர் என்ற பாஜகவினர் சொல்கிறார்கள்”என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த துரைமுருகன், “இடிஞ்ச மசூதியை வைத்து அரசியல் நடத்துபவர்கள் தான் பாஜகவினர். அவர்கள் எங்களை கேள்வி கேட்பதா? திமுகவுக்கு போட்டி பாஜக தான் என்று சொல்கிறார்கள்? என்ற கேள்விக்கு அது அவர்கள் கருத்து. எங்களுக்கு போட்டி அதிமுக மட்டும் தான் என்று பதிலளித்தார். 

முன்னதாக அதிமுக வலுவிழந்து திமுக- பாஜக என்கிற நிலை உருவாகி  இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதில் உண்மையில்லை. அதிமுக - திமுக இரண்டு கட்சிகளுக்கும்தான் போட்டி எனக்கூறி துரைமுருகன் பாஜகவுக்கு ஆதரவு உருவாகி வருவதாக கூறப்படும் பிம்பத்தை உடைத்துள்ளார்.