Durai Murugan press meet
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்போதோ சமாதியாகிவிட்டதாகவும், கமிஷன் மட்டும் இன்னும் உயிரோட இருப்பதாகவும் திமுக தலைமை நிலையச் செயலாளர் துரை முருகன் அரசை கலாய்த்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரை முருகன், தமிழகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அரசு நிர்வாகத்தை கவனிப்பதில்லை என்றும், எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா எடுப்பதில் தான் தங்களது நேரத்தை செலவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
எம்ஜிஆர் விழாவுக்காக அவர்கள் இருவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பின்னால் மற்ற அமைச்சர்கள் ஓடுகிறார்கள், இப்படி அரசு நிர்வாகத்தைப் பற்றி கொஞ்சம் கூட அவர்கள் கவலைப்படுவதில்லை என தெரிவித்தார்.
நிர்வாகம் நடத்துவது குறித்து மாட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மீட்டிக் நடத்தவேண்டும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படி ஒரு மீட்டிங் நடத்தியதாகவே தெரியவில்லை என கூறினார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்போதோ சமாதியாகிவிட்டதாகவும், கமிஷன் மட்டும் இன்னும் உயிரோட இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் யாரும் மதிப்பதேயில்லை என்றும், முதலமைச்சர்தான் மற்ற அமைச்சர்களை மதித்து வருகிறார் என்று தெரிவித்த துரை முருகன், இல்லை என்றால் எங்கே தன்னைவிட்டு அவர்கள் ஓடி விடுவோர்களோ என இபிஎஸ் பயந்துகொண்டிருப்பதாக கூறினார்.
