தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான துரை முருகன், தன்னை கருணாநிதி தனது சொந்த பிள்ளைபோல வளர்த்தார் என்றும், ஸ்டாலினுக்கு கொடுக்கத உரிமைகளை தனக்கு கொடுத்தார் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்ணீர் வடித்தார்.

ஒரு கட்டத்தில் துரைமுருகன் கதறி அழுதார். அருகில் அமர்ந்திருந்த  ஸ்டாலின் அவரைத் தேற்றினார். தொடர்ந்து துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை துரை முருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சிகிச்சை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.வீடு திரும்பிய அவர், இன்று காலை 10 மணிக்கு சட்டப் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.