எப்படியோ தினகரனுக்கு டாட்டா காட்டிவிட்டு, மொத்த கூடாரத்தையும் காலி செய்துவிட்டு கூண்டோடு திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி.அதிகாலையிலிருந்தே அறிவாலயத்தில் கூட்டம் கூட ஆரம்பித்தது, சரவெடியுடன் சார சாரையாக தேனாம்பேட்டையில் வந்திறங்கிய மாஜி அதிமுகவினரால் மவுன்ட் ரோடே அதகளம் பூண்டது.

10:30, 12:30  எமகண்டம், ராவுகாலம் என்பதால் 12:30 மணிக்கு மேல் பட்டாசு வெடி வெடிக்க தொண்டர்கள் படையோடு அறிவாலயத்தில் வந்து கெத்தாக இறங்கினார். அப்போது வாசல் முழுக்க அவரது ஆதரவாளர்கள் இருந்தனர். அதேபோல் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அண்ணா அறிவாலயத்தில் வாசலில் செந்தில் பாலாஜியை வரவேற்க காத்து இருந்தனர். செந்தில் பாலாஜி உள்ளே வரும் போது அவரது பெயரை சொல்லி அவரது ஆதரவாளர்கள் காது கிழிய கோஷம் எழுப்பினார்கள்.

நேராக உள்ளே சென்ற செந்தில் பாலாஜி,  ஸ்டாலினுக்கு தகதகக்கும் மஞ்சள் நிற பொன்னாடையை போர்த்தி, தலை குனிந்து செந்தில்பாலாஜி வணங்கி நிமிர்ந்ததும், அருகில் நின்ற துரைமுருகன், ‘என்ன செந்தில்  கட்சி கரையில்லாம வேட்டி கட்டியிருக்கீங்க? நம்ம கட்சி கரைவேஷ்டியை கம்பீரமா கட்டிட்டு வந்திருக்க வேண்டிதானே?’ என்று குறும்பாக கலாய்த்து பேசி சிரிக்க, ஸ்டாலினும் கலகலத்திருக்கிறார். 

ஆம் எந்த கட்சி கரையுமில்லாமல் சாதார நிறத்திலான கரை வேஷ்டியைத்தான் கட்டியபடி வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி அதைத்தான் துரைமுருகன் தனக்கே உரிய ஸ்டைலில் ஜாலியாக கலாய்த்திருக்கிறார். என்னவோ செந்தில் வேட்டியில கரை இல்லேன்னாலும் பரவாயில்ல, கறை படாம பார்த்துக்குங்க! அம்புட்டுதான் சொல்வோம்.