தேர்தல் எதிரொலி...! அடுத்த நொடியே ராஜினாமா செய்தார் பாஜக தலைவர் .. ! 

மகாராஷ்டிரா. ஹரியானா மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக160 இடங்களிலும் காங்கிரஸ் 96 இடங்களையும் மற்றவை 32 இடங்களையும் பெற்று, பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் இருந்து வருகிறது, ஆனால் ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக 35 இடங்களிலும் காங்கிரஸ் 35 இடங்களிலும் சமமாக பெற்று, மற்ற சுயேட்ச்சை 20 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. இதன் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. 

ஆனால் ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கு குறைந்தது 46 இடங்களை பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு நிலையில், எப்படியும் 46 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த பாஜகவிற்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. எனவே ஹரியானாவில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன்காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு பாஜக முன்னிலை பெற முடியாத காரணத்தினால் ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பர்லா பின்னடைவுக்கு பொறுப்பேற்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.