DTV Dinakaran has filed a dengue awareness leaflet without permission in Tiruchi.

திருச்சியில் அனுமதியின்றி டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியதாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. 

தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் டெங்கு அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நோட்டீஸை டிடிவி தினகரன் திருச்சியில் பொதுமக்களிடம் வழங்கியதாக தெரிகிறது. 

இந்நிலையில், திருச்சியில் அனுமதியின்றி டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியதாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.