தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட  வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து ள்ளது. இதுகுறித்து அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

தென் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும், அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி  செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். 

டிசம்பர் 23-ஆம் தேதி மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.