Drug trafficking - AIADMK leaders son arrested
போதைப் பொருள் வைத்திருந்ததாக அதிமுகவின் திண்டுக்கல் மகளிர் அணி செயலாளர் வளர்மதியின் மகன் அருண் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் அருண் குமார். இவர் நேற்றிரவு தனது காரில் போதைப்பொருள் கொகைன் வைத்திருந்ததாக, மத்திய போதை பொருள் நுண்ணணுவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அருண், திண்டுக்கல் மகளிர் அணி செயலாளர் வளர்மதி என்பவரின் மகனாவார். வத்தலகுண்டைச் சேர்ந்த அதிமுக மகளிர் அணி செயலாளராக இருப்பவர் வளர்மதி. ஆரம்ப காலத்தில் இருந்து வளர்மதி தொடர்ந்து கட்சியில் இருப்பதால் தனது மகன் அருண் குமாருக்கு அரசு வேலை வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்டதை அடுத்து, அருண் குமாருக்கு, தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ. போஸ்டிங் கொடுத்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
இந்த நிலையில் அருண் குமார் கடந்த 10 நாட்களாக அலுவலகத்திற்கு விடுமுறை கூறியுள்ளார் அருண். இந்த நிலையில், வத்தலகுண்டில் உள்ள தனது வீட்டில் காரில் கொக்கைன் கடத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் 4 பேரையும் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
போதை பொருள் கடத்தலில் சிக்கி வளர்மதியின் நிம்மதியைக் கெடுத்து கெட்டப் பெயரை ஏற்படுத்தி விட்டதாக அதிமுகவினர் சிலர் வேதனையுடன் கூறுகின்றனர்.
