Asianet News TamilAsianet News Tamil

பெரியாரின் பலகோடி சொத்தை சுரண்டி தின்ற கி. வீரமணி... திரௌபதிக்காக திமிரி எழும் ராமதாஸ்..!

மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்த திரௌபதி படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் இந்த படம் குறித்து பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. படம் சூப்பர் என்று ஒரு கூட்டமும், குப்பை என்று ஒரு கூட்டமும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த திரைப்படத்தை 2-வது முறையாக திரையரங்குக்கு சென்று குடும்பத்துடன் பார்வையிட்டார். 

draupathi movie issue...PMK Ramadoss Attack Veeramani
Author
Tamil Nadu, First Published Mar 5, 2020, 5:11 PM IST

பெரியார் விட்டுச்சென்ற பல்லாயிரம் கோடி சொத்துகளை சுரண்டி தின்றதை தவிர கி. வீரமணி மக்களுக்காக உருப்படியாக என்ன செய்துள்ளார் என்று ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்த திரௌபதி படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் இந்த படம் குறித்து பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. படம் சூப்பர் என்று ஒரு கூட்டமும், குப்பை என்று ஒரு கூட்டமும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த திரைப்படத்தை 2-வது முறையாக திரையரங்குக்கு சென்று குடும்பத்துடன் பார்வையிட்டார்.  

draupathi movie issue...PMK Ramadoss Attack Veeramani

இதற்கு தி.க. தலைவர் கி. வீரமணியோ, திரெளபதி படம் சாதி வெறியை தூண்டுவதாகக் குற்றம்சாட்டினார். இதற்கு தனது டுவிட்டர் பதிவில் கடுமையாக ராமதாசுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு கி.வீரமணிக்கு பதிலடி கொடுத்திருந்த ராமதாஸ் காமாலைக் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். அதைப் போலத் தான் நாடகக் காதல் ஆதரவாளர்களுக்கு சீர்திருத்தங்களை சொல்லும் படம் கூட சாதிவெறி படமாக தெரிகிறது. அய்யோ பாவம். 

draupathi movie issue...PMK Ramadoss Attack Veeramani

மேலும், தமிழ்நாட்டில் எல்லா சாதிகளையும் ஒழித்து விட்ட பெருமை கி.வீரமணியையே சாரும். அதற்காக அவருக்கு சாதிகளை ஒழித்த சாதனையாளர்(?!) என்ற பட்டத்தைக் கொடுக்கலாம்.சாதி ஒழிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பெரியார் விட்டுச் சென்ற பல்லாயிரம் கோடி சொத்துகளை சுரண்டி தின்றதை தவிர இவர்கள் செய்த சேவை என்ன? காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios