திரெளபதி படத்தை பார்க்க வருமாறு அப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு வாலண்டரியாக அழைப்பு விடுத்துள்ளார். 

பா.ரஞ்சித் தனது படங்கள் மூலம் சாதிய குறியீட்டை அடையாளப்படுத்துவதாகவும், மாற்று சாதியினரை கொடூரக்காரர்களாக சித்தரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், திரெளபதி படம் குறிப்பிட்ட சாதியினரின் நாடகக் காதலை மையத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும் என திரெளபதி இயக்குநர் அழைப்பு விடுத்து இருந்தார். 

இந்நிலையில் சினிமா தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.கோபி, தனது ட்விட்டர் பதிவில், ’’சகோதரர் பா.ரஞ்சித் அவர்களுக்கு. நீங்கள் திரெளபதி படத்தை பார்க்க வர வேண்டும். உங்களை திரெளபதி படம் பார்க்க வைக்க முயற்சிகள் செய்தேன். ஆனால், உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் டிவிட்டர் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் சமம் என்ற அம்பேத்கர் அவர்களின் வார்த்தையை உண்மையாக்க நீங்கள் திரெளபதி படத்தை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை! எனத் தெரிவித்துள்ளார். 

இதனை ரீ-ட்விட் செய்துள்ள திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி, ’’நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை...’’என அழைத்துள்ளார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ’’அப்படியே அவரோட முதலாளி பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களையும், இவர்களின் கொடை வள்ளல் மு.க.ஸ்டாலின் அவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்’’எனத் தெரிவித்துள்ளார்.