புயல் வேகத்தில் போன பேச்சுவார்த்தை சிக்கல் காரணமாக தேங்கி நிற்பதால் மற்ற கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு குறித்து உறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறது.

 

பாஜக கேட்கும் தொகுதிகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள். அதேசமயம் கூட்டணிக்காக இன்னொரு கட்சியும் தங்களுக்கு இந்த தொகுதி தான் வேண்டும் என்று பட்டியல் கொடுத்துள்ளது. அதிலும், பாஜக கேட்ட தொகுதிகள் அடங்கி இருக்கிறது. இதனால், அதிமுக, தரப்பில் பஜக தலைவர்களிடம், பாமக நமது கூட்டணியில் இருந்தால் நமக்கு பலம். அவர்கள் கேட்ட அத்தனை தொகுதியும் கொடுக்கப்போவதில்லை.

அதில் ஒரு தொகுதியை நீங்கள் விட்டு தரவேண்டும். அதேபோல எங்களுக்கு அதிகமான வெற்றி வாய்ப்பு மற்றும் எங்கள் தலைவர்களின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதால் அவர்கள் கேட்கும் தொகுதியை கொடுத்தால்தான் தேர்தலில் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு வேலை செய்வார்கள். அவர்களை பகைத்து கொண்டு எளிதாக வெற்றி பெறும் தொகுதியை உங்களுக்கு தருவதில் சிக்கல் இருக்கிறது’’ என கூறியிருக்கிறார்கள். குறிப்பாக கொங்கு மாவட்டங்களில் 2 தொகுதிகளை கேட்கிறது பாஜக.

ஆனால், அமைச்சர்களான வேலுமணியும், தங்கமணியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ’நாங்கள் தொகுதியை தயார் செய்து வைத்திருக்கிறோம். அந்த தொகுதியில் ஏராளமான மக்கள் பணியை செய்துள்ளோம். அது எங்கள் கோட்டை. வேறு மண்டலத்தில் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் தான் பேச்சுவார்த்தை இழுத்து கொண்டே போகிறது. பாஜக முக்கிய தலைவர்கள் கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்த இடத்திலேயே மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவோம் கூறியிருக்கிறார்கள். அந்த கோரிக்கையையும் அதிமுக நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.