Asianet News TamilAsianet News Tamil

மதிமுக ...! பாஜக ....!! திமுக...!!! எம்.எல்.ஏ சீட் .... - எகிறும் சரவணனின் கிராஃப்

dr sarvanan-carreer-in-politics
Author
First Published Oct 22, 2016, 7:02 AM IST


மதுரை வீதிகளில் முஷ்டியை மடக்கி கொண்டு ஆளுயர போஸ்டர்களில் அவ்வப்போது போஸ் கொடுப்பவர்தான் டாகடர் சரவணன். 

எம்.பி.பி.எஸ் பட்டம் படித்த டாக்டர் சரவணன் வைகோ மீது கொண்ட பற்று காரணமாக மதிமுகவில் இணைந்தார். மதுரையில் பூமி நாதன் மதிமுகவின் முகமாக பார்க்கப்பட்ட காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சரவணன் , அனைவரும் படிப்படியாக மதிமுகவை விட்டு விலகி சென்ற பின்னர் இவர் ஒருவர் தான் மதுரை மதிமுகவின் முகம் என்பதாக மாறிப்போனார்.

dr sarvanan-carreer-in-politics

2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் மதிமுக என்ற கட்சி ஒன்று இருப்பதை மதுரை மக்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தி கட்சியை அப்டேட்டாக வைத்து அதற்காக பணத்தை தண்ணீராக வாரி இறைத்தார் சரவணன்.

இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக பணத்தை செலவழித்து முதலீடு செய்து நல்ல எதிர்காலத்துக்காக சட்டமன்ற தேர்தலில்  காத்திருந்த சரவணனின் கனவில் மண் அள்ளி போட்டதாக அமைந்தது மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் கடுப்பாகி போன சரவணன் மதிமுகவிலிருந்து வெளியேறி விஜயகாந்துடன் கூட்டணி அமைத்ததால் வெளியேறினேன் என பகீரங்கமாக அறிவித்தார். 

dr sarvanan-carreer-in-politics

பிரஸ் மீட் முடிந்த கையோடு பொன்னாரை சந்தித்து பாஜகவிலும் இணைந்துகொண்டார். ஒரே மாதத்தில் பாஜக கசந்துவிட அதே நேரத்தில் மதுரை மத்தி மாவட்ட செயலாளர் தளபதி வலைவிரிக்க அதில் சிக்கி திமுகவில் தன்னை இணைத்து கொண்டார் சரவணன்.

dr sarvanan-carreer-in-politics

அங்கப்போய் இங்கப்போய் கடைசியில் திமுகவில் இணைந்த சரவணன் முந்தைய வேட்பாளரும் , மதுரை புறநகர் மாவட்டசெயலாளரும், சேடப்பட்டி முத்தையாவின் மகனுமாகிய மணிமாறனின் வாய்ப்பை தனது செல்வாக்கால் தட்டி பறித்துள்ளார்.

dr sarvanan-carreer-in-politics

இவருக்கு பின்னணியில் இருந்து உதவுவது அதிமுகவில் உள்ள பிரபல சினிமா பைனான்சியர் என்று விபரமறிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios