Asianet News TamilAsianet News Tamil

பாஜகவில் இருந்து ஓட்டம்.! திமுக அழைப்பிற்காக காத்திருப்பு.! கடைசியில் அதிமுகவில் தஞ்சம் அடைந்த டாக்டர் சரவணன்

பாஜகவில் இருந்து விலகிய மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

Dr Saravanan a BJP executive joined the AIADMK
Author
First Published Jan 4, 2023, 11:23 AM IST

நடிகராக மாறிய டாக்டர் சரவணன்

மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணனுடையது தான்.. இந்த மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பணம் இல்லாமல் இலவச வைத்தியம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மதுரையில் பேமஸ் ஆன சரவணன் தனது அரசியல் பயணத்தை மதிமுகவில் தொடங்கி உள்ளார். இதனையடுத்து மதுரைக்கு மட்டுமே தெரிந்த தன்னை தமிழகம் முழுவதும் பேமஸ் ஆக வேண்டும் என்ற காரணத்தால் அகிலன் என்ற படத்தில்  நடிகராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் டாக்டர் சரவணன். இப்படத்திற்காக பல கோடி ரூபாய் பணத்தை தண்ணீர் போல செலவழித்தார். மதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் தன்னை பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைத்துக்கொண்டார். அங்கிருந்து சில நாட்களிலேயே மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் இணைத்துக்கொண்டார். 

யார் இந்த டாக்டர் சரவணன்..! எத்தனை கட்சி மாறியுள்ளார் தெரியுமா..? அதிர வைக்கும் பரபரக்கும் தகவல்

Dr Saravanan a BJP executive joined the AIADMK

திமுக எம்எல்ஏவான டாக்டர் சரவணன்

இதனையடுத்து திருப்பரங்குன்றம், அரவங்குறிச்சி, இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இதனையடுத்து மீண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.  ஆனால் திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்க்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் திமுக தலைமை மீது அதிருப்தி அடைந்த டாக்டர் சரவணன் பாஜகவில் சேர்ந்தார். இதனையடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் உடனடியாக டாக்டர் சரவணனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா..? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை.?

Dr Saravanan a BJP executive joined the AIADMK

இதனையடுத்து மதுரை மாவட்ட செயலாளராக இருந்த டாக்டர் சரவணன், பாஜக மீது இருந்த அதிருப்தி காரணமாக திடீரென விலகி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து மீண்டும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. டாக்டர் சரவணனும் அதற்காக காத்திருந்தார். ஆனால் டாக்டர் சரவணனை திமுகவில் இணைத்து கொள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என கூறப்படுகிறது. திமுகவின் அழைப்புக்காக காத்திருந்த டாக்டர் சரவணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு செல்லுமா..? ஓ.பன்னீர் செல்வமா.? எடப்பாடியா..? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய முடிவு.?

Follow Us:
Download App:
  • android
  • ios