Double Leaf logo - to whom the information lakkani Election Commissioner

ஆர்.கே. தொகுதி இடை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள், வாக்கு இயந்திரங்கள் தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்.கே. நகர் இடை தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 256 வாக்குச்சவாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்காக 1024 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை ஆய்வு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மொத்தம் 2,62,721 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்1,28,305. பெண் வாக்காளர்கள் 1,34,307, 3வது பாலினம் 109 பேர் உள்ளனர்.
தேர்தல் செலவினங்களை பார்வையிட 24ம் தேதி பார்வையாளர்கள் குழு வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை பார்வையிடவும், பணப்பட்டுவாடா குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க 307 பேர் வரவழைக்கப்பட உள்ளனர் என்றார்.
மேலும், அதிமுக சார்பில் போட்டியிடும் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கேட்கின்றனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றார்.