கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்,’’தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக அவற்றில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தும் புறக்கணிப்பு தொடர்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்து துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார். உள்ளூரில் வன்னியர் சமுதாயத்தில் தகுதியான பேராசிரியர்கள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுவா சமூக நீதி? இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது? தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான அமைப்புகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அமைப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.  

 

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு 27.11.2019 அன்று மனு அளித்தோம். சமூகநீதி அமைப்பில் பெரும்பான்மை சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல்  உண்மையான சமூகநீதி எவ்வாறு மலரும்?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.