விவகாரம் தலைமைக்கு தெரிந்தும் எந்த ஒரு  ரியாக்‌ஷனும் இதுவரை காட்டாமல் மவுனமாக இருந்து வருகிறதாம். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் தேமுதிக கட்சியினர் போட்டியிட மாட்டோம் என வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் கட்சியின் தேமுதிக தலைமை யோசித்து வருகிறதாம்.

தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடந்ததாம். அப்போது ஒட்டு மொத்த நிர்வாகிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் நமக்கு வெற்றி கிடைப்பது கஷ்டம். தொண்டர் பலமும், கரன்சி பலமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே இருக்கிறது. வசதி உள்ளவர்கள் மட்டும் தங்கள் இஷ்டப்படி தேர்தலில் நிற்கலாம். போட்டியே கிடையாது என சொன்னாலும் ஒன்றிரண்டு கைகள் தான் உயர்ந்துள்ளது.

மற்றபடி கூட்டத்தில் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என ஒரு குரல் கூட எழும்பாமல் மயான அமைதியாக இருந்துள்ளது. அதில் பேசிய சிலர், தேர்தலில் போட்டியிட்டாலும் செலவழிக்க விட்டமின் ‘‘ப’’ இல்லை என கைவிரித்து விட்டார்களாம். இதனால் தலைமையிடம் விட்டமின் ‘‘ப’’ கொடுத்தால் தேர்தலில் நிற்கிறோம். இல்லை என்றால் எங்களை விட்டுவிடுங்கள் என்று நிபந்தனை விதிக்கலாமா என்று யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விவகாரம் தலைமைக்கு தெரிந்தும் எந்த ஒரு ரியாக்‌ஷனும் இதுவரை காட்டாமல் மவுனமாக இருந்து வருகிறதாம்.

 இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் தேர்தல் சமயத்தில் வெளியூர் டூர் போக முடிவு செய்து இருக்கிறார்கள்.