தன்னைஅறிக்கை நாயகன் என விமர்சித்த  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஊழல் நாயகன் என பட்டம் கொடுப்பதாக திமுக தலைவர் அறிவித்ததற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, " லாவணி பேசும் பேமாணி கூகுளில் கொட்டும் கோமாளி"  என்ற தலைப்பில் பதிலடி கொடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

நான்கு சுவற்றுக்குள் கேமராக்களை வைத்துக்கொண்டு விக்வைத்து வீடியோ படப்பிடிப்பு நடத்தி அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி கொண்டிருப்பவரை அறிக்கை நாயகர் என்று  முதல் அமைச்சர் சொன்னால் உடனே முதலமைச்சருக்கு இவர் திருப்பி பட்டம் சூட்டுகிறேன் என்று அவசரகதியில் அவரோட அப்பாவுக்கு உலகமே சூட்டிய ஊழல் நாயகர் பட்டத்தை உளறிக் கொட்டியிருக்கிறார்.

மிஸ்டர் சுடலை, திராவிட அரசியல் வரலாற்றில் பொப்புலி நாயுடு தொடங்கி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா, மூதறிஞர் ராஜாஜி, பெரியவர் பக்தவத்சலம், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய அறிவுசார் பொக்கிஷங்கள் ஆளுமை செலுத்திய அரசியலில், ஒரு கோமாளியாக புகுந்துகொண்டு உலகத்தையே குலுங்கி சிரிக்க வைக்கிற பக்கா காமெடி பீசு சுடலை இன்று சுட்டிக்காட்டப்படும் தாங்கள் தானே வடிவேலுவின் நகைச்சுவை இடத்தை தங்களது வாய்ச்சொல் உளறல்கள் தான் இட்டு நிரப்பி இருக்கிறது. 

கூகுளில் சுடலை என்று தட்டச்சு செய்தால் மீம்ஸ்களின் மாம்ஸே, கண்டன்ட்களின் கடவுளே, பழமொழி பைத்தியமே, குடியரசு தினம் சுதந்திர தினம் அறியாத கூமுட்டை என்றெல்லாம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. திருவாரூர் துண்டுச் சீட்டில் திறமைக்கான புனைப் பெயர்களும் பதக்கங்களும் அப்படி இருக்க, கையில் குறிப்பு ஏதும் இல்லாமல் மணிக்கணக்காக மக்கள் பிரச்சினைகளை மேடைகளிலும் சரி, நிருபர்களின் மாடங்களிலும் சரி, புள்ளி விவரங்களோடு அள்ளி வீசும்  எங்கள் எடப்பாடியாருக்கு பட்டம் சூட்டும் யோக்கியதை காலி பெருங்காய டப்பா, விக் வைத்த வீக்குக்கு உண்டோ. என குத்தீட்டி பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.