மலேரியா சிகிச்சைக்கு  பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின்   மருந்துகளை உட்கொள்வதின் மூலம் கடுமையான பக்கவிளைவுகள் மற்றும் உடல் உறுப்பு சேதத்திற்கு  வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் . கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது .  இந்த மருந்து மலேரியாவுக்கும் ,  முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்தாகும் .  அதே நேரத்தில் இந்த மருந்து கொரோனா வைரசுக்கு எதிரான கேம் சேஞ்சர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதை அறிவித்திருந்தார் .  இந்நிலையில் இந்த மருந்தின் தன்மை குறித்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது .  முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் தீவிரமாக பரவியபோது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்பட்டது .  அப்போது அது நல்ல பலனை கொடுத்ததாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர் . 

தற்போது கொரோனா வைரசுகும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டதாகவும் அது நல்ல பலனைக் கொடுத்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது .  அதாவது கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வைரசுக்கு சிகிச்சை அளிப்பதில் நல்ல பயனுள்ளதாக இருந்தது என  கண்டறியப்பட்டது,  இது சார்ஸ் மற்றும் கொரோனா  வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொருந்தும் என்றும் தெரியவந்தது.  ஆனால் இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் வி ராமசுப்பிரமணியன் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சிறிய சோதனைகளின் மூலம் அது  வைரஸ் சிகிச்சைக்கு உகந்த மருந்து என கூறுவது சரியாகாது .  அதே போல் முறையான அறிவியல் சான்று இல்லாமல் இதை சிகிச்சைக்கு  பரிந்துரைக்க முடியாது என அவர் கூறியுள்ளார் .  மலேரியா ,  முடக்குவாதம் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளனர். 

ஆனாலும் அந்த மருந்தின் செயல் திறனுக்கு முறையான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவர்கள் வாதிடுகின்றனர் ,  அதேபோல இது கண் குறைபாடு மற்றும் இதயத்தில் பாதிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர் ,  இந்நிலையில் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் மருத்துவ ஆராய்ச்சி தளமான சென்னை வைரஸ் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும்  மற்றும் தொற்றுநோய்கள் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனருமான என் குமாரசாமி இந்த மருந்தில் வைரஸ் தடுப்பு இருப்பதாக தெரியவில்லை , இது இதய செயலிழப்பு அல்லது நுரையீரல் சரிவு போன்ற பிரச்சனைகளுக்கு  பயனளிக்கக்கூடியது  இந்நிலையில் இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு உகந்ததுதானா என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது எனவே அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார் .