அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் பேச்சை கேட்காததால், அவரது உறவினர்கள் ஓபிஎஸ்ஸின் சட்டையை பிடித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பொறு ப்பு முதலமைச்சராக இருப்பவர் ஒ.பன்னீர்செல்வம், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், முதல்வர் பதவியை ஏற்க தயாராக உள்ளார் அதிமுக பொது செயலாளரான வி.கே.சசிகலா.

தற்போதையி நிலைவரப்படி, சசிகலா தரப்புக்கு, 120 எம்எலஏக்கள் ஆதரவு உள்ளது. அதுசேதராம் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதிபலித்துவிட்டால், இன்னும் 4 ஆண்டுகளுக்கு அவரை அசைக்க முடியாது என்கிற்றார்கள் சசிகலாவின் டேலன்ட்டை தெரிந்தவர்கள் வட்டாரம்.

வெற்றிகரமாக பதவியேற்றுவிட்டால், அதிரடி அறிவிப்புகளால் மக்களை எப்படி கவர்வது என்ற மாயாஜால தந்திரங்களை, சசிகலா கையில் வைத்திருக்கிறார் எனவும் பேசப்படுகிறது.

இது இப்படி இருக்க, பன்னீரின் ராஜினாமாவுக்கு முன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது, சசிகலாவின் உறவினர்கள் தம்மை அவமானப்படுத்திவிட்டதாக, ஒ.பன்னீர்செல்வேமே பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் தொடர்ந்து கூறி வருகிறார்.

முதலில் அவர், அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள்தான் அவமானப்படுத்தியதாக பன்னீர் கூறினார். அதை வெளிப்படையாகவே பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவின் உறவினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து பகீர்தகவல்களை பிரபல வார இதழ் வெளியிட்டுள்ளது.

அதாவது சசிகலாவின் உத்தரவை ஒபிஎஸ், மீறும்படி சில கருத்துக்களை தெரிவித்ததால், ஆவேசத்தில் ஒ.பன்னீரின் சட்டையை பிடித்து உலுக்கினார் டாக்டர் வெங்கடஷ் என செய்தி வளியாகியுள்ளது. இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலின் உண்மை தன்மை அங்கு இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றாலும், டி.டி.வி.தினகரனை பொறுத்தவரை, சட்டையை பிடித்தாலும் பரவாயில்லை என்ற அளவில்தான் ஓபிஎஸ் அவரிடம் பழகி வந்தார்.

10 ஆண்டுகளாக டி.டி.வி.தினகரன் தான் உலகம். அவர் சட்டையை பிடித்தாலும் பரவாயில்லை. எட்டி உதைத்தாலும் பரவாயில்லை என்ற ரேஞ்சில் ஒபிஎஸ் பழகிவந்தார் என்பதே உண்மை.

என்ன நடந்து இருந்தாலும், ஒபிஎஸ்சின் லெவல், என்னமோ, சசிகலாவின் குடும்பத்தை பொறுத்தவரை எப்போதுமே அவர் சாதாரண லெவல் என்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓபிஎஸ்சயும், தினகரனையும் பார்த்து வருபவர்கள்.

ஆனால், ஒபிஎஸ் சொல்வதில் ஒரு விஷயத்தில் கவனித்தால், அதிலும் ஒரு உண்மை உள்ளது. அதைதான் அவர் அடிக்கடி கூறியும் உள்ளார்.

அதாவது, தனிப்பட்ட ஒபிஎஸ்சை எவ்வளவு வேண்டுமானாலும் அசிங்கப்படுத்துங்கள். ஆனால், முதலமைச்சர் பதவிக்கு ஒரு மாண்பு இருக்கிறது. அந்த மாண்பையும், மதிப்பையும் கொச்சை ப்படுத்தாதீர்கள். அவமானப்படுத்தாதீர்கள் என அடிக்கடி அவர் பேட்டியில் கூறி வருவதை கனிக்கத்தான் தேன்றுகிறது.