பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். அவர்கள் தங்கள் சாதிக்கும், நம்பும் சாதிக்கும் எதிராக உள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய அவர், ’’எனக்கு இந்த விருதை வழங்கி யதைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரித்தது பெருமை யாக உள்ளது. இது 30 ஆண்டுகள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். திருமாவளவனை யாரும் தனிமைப்படுத்தவோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஓரங்கட்டவோ முடியாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் சலசலப்பை உண்டாக்க என்னை குறிவைத்து அப்பட்டமான அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
அடுத்து நாங்கள்தான் முதல்வர் என தம்பட்டம் அடிக்கும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. மேலும், எந்த சாதிக்கும் எதிரான கட்சியும் அல்ல. சமூக நீதியை அழிக்க, பெரியாரின் அடையாளத்தை சிதைக்க முயற்சிக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். அவர்கள் தங்கள் சாதிக்கும், நம்பும் சாதிக்கும் எதிராக உள்ளனர்.
பாஜக முதலில் காவு வாங்கப்போவது அதிமுகவைத்தான். திமுக - பாஜக என்ற நிலையை உருவாக்க முயல்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு அதிமுக மிகப்பெரிய துரோகம் செய்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 22, 2021, 1:07 PM IST