அமமுகவிலிருந்த செந்தில் பாலாஜியை திமுகவுக்கு அனுப்பி வைத்ததே சமீபத்தில் திமுகவில் இணைந்த கலைராஜன் தான் என டி.டி.வி அணி நிர்வாகி தெரிவித்துள்ளார்.

 

தென் சென்னை மாவட்டகழக துணை செயலாளர் வைத்தி, தனக்குப் அமமுகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் செந்தில்பாலாஜி விவகாரம் குறித்து பேசிய அவர்,  தென்சென்னை மாவட்ட செயலாளர் கலைராஜன் திமுகவுக்கு தாவி விட்டார். அவர் விலகப் போகிறார் என டி.டி.வியிடம் ஆறுமாதமாக சொல்லி வந்தேன். ’நாமே நீக்க வேண்டாம். அவரே போகாட்டும்’ என சொல்லி வந்தார். வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலினை சந்திக்க விமான நிலையம் போவதை அறிந்த டி.டி.வி அவரை நீக்கி விட்டார். 

செந்தில் பாலாஜியை தலைமேல் தூக்கி வைச்சு ஆடிக்கொண்டு இருந்தார். செந்தில் பாலாஜியும் திமுகவுக்கு தாவிட்டார். செந்தில் பாலாஜியை திமுகவுக்கு அனுப்பி வைத்ததே கலைராஜன் தான். முக.ஸ்டாலினிடம் இரவு 11 மணிக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார் எனச் சொன்னேன். அதற்கு நீ வேண்டும் என்றே புகார் சொல்கிறாய். எனச் சொல்லிவிட்டார் டி.டி.வி. கலைராஜன் டி.டி.வி. சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து தூக்கி வைத்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் டி.டி.வி அவரைச் சுற்றியே வேலி அமைத்துக் கொண்டிருக்கிறார். 

கலைராஜன் காசு இல்லாமல் எதையுமே செய்யமாட்டார். அவருக்கு காசு தான் கடவுள். ஆனால் இவரது சாதிக்காரன் என்பதால் தஞ்சாவூரில் இருந்து வந்து இங்கே பொறுப்பு கொடுத்து தென் சென்னையில் இருந்த ஆதிராஜாராமை பகைத்துக் கொண்டார். சேகர் பாவை பகைச்சுக்கிட்டார் டி.டி.வி.தினகரன்.