கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரை பார்க்க அனுமதிகேட்டும் மு.க.ஸ்டாலின் கடைசி வரை கேப்டனை பார்க்கவிடவே இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கேப்டனை பார்க்க விருகிறார். நாங்கள் நினைத்தால் ஸ்டாலின் வருவதை தடுக்க முடியாதா? கருணாநிதிக்கு உடல்நலம் சரியில்லாதபோது சந்திக்க அனுமதிகேட்ட முதல் ஆள் கேப்டன். ஆனால், கடைசி வரைக்கும் கேப்டனுக்கு ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளவில்லை.

 

கேப்டனை ரஜினி வந்து பார்த்து கிளம்பிய உடனே ஸ்டாலின் சுதீஷை கூப்பிட்டு உடனே கேப்டனை பார்க்கணும்... உடனே பார்க்கணும்னு கேட்டு நச்சரித்தார். நாங்க எவ்வளவு பெரிய மனசோட அனுமதி கொடுத்தோமா இல்லையா? அரசியலில் ஓவ்வொரு கட்டத்திலும் தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்துடனே திமுக நடந்து கொண்டிருக்கிறது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.  ஸ்டாலின் வீட்டுக்கு வந்தாரு. அவரை அவ்வளவு மரியாதையாக நடத்தினோம். 

வெளியில வந்து உடல்நிலை மட்டும்தான் விசாரிக்க வந்தேன் என சொல்லிவிட்டு போய் விட்டார். அடுத்து என்னிடம் கேள்விகேட்ட நிருபர்களிடம், இரு தலைவர்கள் பேசும்போது உடநலம் மட்டுமல்ல அரசியல் பேசுவது இயல்பு என நான் சொன்னேன். அரசியலும் அப்போது பேசப்பட்டது. இதனைத் தவிர என் வாயிலிருந்து எதும் வரவில்லை. பிரேமலதா சொன்னது மட்டும் நியாமா? அது மட்டும் நாகரீகமாக எனக் கேட்கிறார்கள். கேப்டனிடம் அரசியல் பேசவில்லை என ஸ்டாலின் வந்து விளக்கம் கொடுக்கட்டும் பிறகு அதற்கு நான் பதில் சொல்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.