மத்திய அமைச்சர் பதவியை எச்.ராஜாவுக்கு வழங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாஜகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பலமுறை தோல்வியை தோல்வியை தழுவி இருந்தாலும் ஹெச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜக இந்தியா முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக மட்டும் மொத்தமாக 303 தொகுதிகளைப் பெற்று தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைத்தது. ஆனாலும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் உள்ளது தமிழக பாஜக. அதற்கு மிக முக்கியக் காரணம் தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. 

ஆனாலும் தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சர்ச்சை பேச்சால் ராஜாவுக்கு எதிர்ப்புகள் வலுத்தாலும் அவரது ஹிந்துத்துவா கொள்கைகள் மற்றும் காரசார மேடை பேச்சுக்களுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ராஜா தமிழக பாஜகவின் மிக மூத்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுள் ஒருவர். 

மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட அனைத்து தகுதிகளும் இவருக்கு உள்ளது என ராஜா ஆதரவாளர்கள் கட்சித் தலைமையிடம் பரிந்துரைத்து உள்ளனர். ஆக ஹெச்.ராஜா மத்திய அமைச்சராவது உறுதி எனக் கூறப்படுகிறது.