Asianet News TamilAsianet News Tamil

அடம்பிடிக்கும் அ.தி.மு.க... தல அஜித் சொன்னால்தான் கேட்பாங்களோ..?

அந்த விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூக்குரலிட்டு வருகிறார். விஜயும் பிகில் கிளப்பி விட்டார். ஆனாலும் அதிமுக அசரவில்லை. இந்த விவகாரத்தில் அஜித் வாய்திறந்தாலாவது அதிமுக கேட்குமா? என கேள்வி கேட்டு அதிரவைத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.  

Do you hear Thala Ajith?
Author
Tamil Nadu, First Published Sep 21, 2019, 5:25 PM IST

சுபஸ்ரீ மீது சாலையிலிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர், பேனர் அச்சிட்டவர் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசார், பேனர் அமைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதுகுறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்னரே ஜெயகோபால் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

Do you hear Thala Ajith?

இந்நிலையில் ஜெயகோபால் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அதன் பிறகு தலைமறைவானார்.  ஆளும் கட்சியைச் சேர்ந்தவரான இவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில்  '' சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காப்பாற்றுவது யாருக்காக? அவர் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறதா?  என கேள்வி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.  பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜயும் ஹேஷ்டேக் போட்டு சுபஸ்ரீக்கு நியாயம் கேட்க சொன்னார்.  பேனர் அமைக்கச் சொன்னவரை விட்டுவிட்டு டேங்கர் ளர் ஓட்டுனரையும், பேனர் அச்சிட்ட கடைக்காரரையும் கைது செய்துள்ளதில் என்ன நியாயம்?  எனக் கோபப்ட்டிருந்தார். 

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ஆகியோர் சுபஸ்ரீயின் விபத்தை முன்னிறுத்தி அதிமுக பிரமுகரைக் குற்றம்சாட்டி வந்தும்கூட இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதால் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஸ்டாலின், விஜய் சொல்லி கேட்காத அதிமுக அரசு தல அஜித் இது குறித்து வாய் திறந்தால் நடவடிக்கை எடுக்குமா? எனக் கேட்டுள்ளார். அதாவது இந்த விவகராத்தில் அஜித் குரல் கொடுக்கவில்லை என்பதையும் சூகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios