ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்றதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய திமுக எம்.பி கனிமொழிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்றதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. இதனை சுட்டிக்காட்டி திமுக எம்.பி கனிமொழி எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி, ‘’முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி’’ என குறிப்பிட்டு இருந்தார். 

ஆனால் அவர் குற்றம்சாட்டியதை போல அந்த வாகனம் ஆம்புலன்ஸ் அல்ல. ஆம்புலன்ஸை போல இருந்த அந்த வாகனத்தில் ஒளி மற்றும் ஒலி விளக்குகள் அமைக்கப்படவில்லை என தெளிவாக தெரிகிறது. இதனை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள் கனிமொழிக்கு எதிராக பதிலடி கொடுத்து வருகின்றனர். தயவுசெய்து கொரானா வைரஸ் தடுக்க  அரசுஎடுக்கும் நடவடிக்கை க்கு துணை நிற்காமல் இந்த அசாதாரண சூழ்நிலை யில்  உங்கள் பதவி வெறி பிடித்த  அரசியல் விளையாட்டு விளையாடாதீர்கள்.

இந்த மாதரி வேலையை எந்த முதல்வர் செய்யவில்லை?? அனைத்து இவுக அப்பா செய்யவில்லையா?? பஸ்க்குள் இவுக அண்ணன் ஒரு வரை அறைந்தாரே ஏன்??? சொல்லமுடியுமா??? சற்று விவரமான மக்களவை உறுப்பினர் அவர்களே முகப்பு விளக்கு இல்லாமல் ஆம்புலன்ஸ் சேவை இந்த உலகில் இல்லை என்பது உங்களுக்கு தெரியாது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் ஒரு மீடியாவிற்கும் தெரியவில்லை இல்லை என்பது அவமானமாக உள்ளது.

முடகத்திற்குள், முடக்கம் அறிவித்தால், முடங்கி இருக்கவேண்டும். இது போன்ற அறிவிலிகளைத்தான் இந்த திராவிடம் இத்தனை ஆண்டுகளாக வளர்தெடுத்திருக்கிறது. மக்களை சிறிதும் சிந்திக்க வைக்காமல் அடிமைபோல வைத்திருந்ததில், உங்களை தந்தையின் பங்கு அளப்பரியது’’ என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.