Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை சமாளிக்க இதைச் செய்யுங்கள்... மாற்றுவழி காட்டும் ராகுல் காந்தி ..!

மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் அந்த தொகையை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கலாம்.

Do this to deal with the corona ... Rahul Gandhi showing the alternative ..!
Author
India, First Published Apr 24, 2021, 1:48 PM IST

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் விழிப்பிதுங்கி போயுள்ளனர். இதனிடையே, பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் நிலைமை மோசமாகியுள்ளது. உயிரிழப்பவர்களை புதைக்க இடமில்லாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.Do this to deal with the corona ... Rahul Gandhi showing the alternative ..!

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று 25 நோயாளிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இன்று மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கையிருப்பில் இருக்கும் ஆக்சிஜன் அரை மணி நேரத்துக்கு மட்டுமே வரும், 200 நோயாளிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என டெல்லி சுகாதாரத்துறை அவசர அறிவிப்பை வெளியிட்டது. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் தலைநகர் டெல்லி அழிந்து விடுமென்றும் டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.Do this to deal with the corona ... Rahul Gandhi showing the alternative ..!

இந்த நிலையில், மத்திய அரசு தேவையற்ற திட்டங்களுக்கு செலவிடும் தொகையை நிறுத்தி சுகாதாரத்துறைக்கு செலவிடலாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் அந்த தொகையை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கலாம். இனி வரும் நாட்களில் கொரோனாவால் சிக்கல் இன்னும் தீவிரமாகும். அதை சமாளிக்க தேசம் தயாராக இருக்க வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலை தாங்கிக்கொள்ள முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios