அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைகள் வாய்க்கு வந்தபடி பேசி வம்பில் மாட்டி வருவது தொடர்ந்து வருகிறது. தொடக்க, நடுநிலை வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு என்று கல்வித்துறை அமைச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் அதுவும் டிராப். இதனால் இனி கல்வி துறைக்கு வாய்ஸ் இருக்காது என்றே கட்சி தொண்டர்கள் கூறுகிறார்கள். அதனால் அமைச்சர் செங்கோட்டையன் அப்செட் ஆகியுள்ளார். 

சிஏஏ பற்றி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாணவனை செருப்பை எடுக்க சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  இஷ்டத்துக்கு உளறி கொட்டும் ஜெயகுமார் என்று ஏகப்பட்ட சம்பவங்களால் கட்சி மேலிடம் அந்த நபர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. அவர்களை மாற்ற முடியாது. கேள்வியும் கேட்க முடியாது என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வரை அதிபுத்திசாலித்தனமாக பேசி சிக்கலை ஏற்படுத்தாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டு வருகிறார். அவர்களும் தலையாட்டிவிட்டு வெளியே வந்து மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்கள். ஆகையால் இந்த முறை ஸ்ட்ரிக்ட் ஆகவே எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது எனச் சொல்லி விட்டாராம்.