கையில் கிளியுடன் இருக்கும் பேரறிவாளன் படத்தை வெளியிட்டு, 'அட்வான்ஸ் வாழ்த்துகள்' என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம் என திமுக எம்.பி. செந்தில்குமாருக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் பலர் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஆயுள் தண்டனைகளை மாநில அரசு தமக்கு உள்ள 161-வது அரசியல் சாசனப் பிரிவு அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அறிவுறுத்தியது. இதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இதனை குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார்.

இதனிடையே ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு மிக மிக கடுமையான அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தியது. மேலும், ஆளுநரின் செயல்பாட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மாநில அமைச்சரவையின் முடிவை எதிர்த்து செயல்பட ஆளுநருக்கு எந்த பிரிவு அதிகாரம் வழங்குகிறது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் தற்போதைய நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து தரப்பு வாததங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்;- கையில் கிளியுடன் இருக்கும் பேரறிவாளன் படத்தை வெளியிட்டு, 'அட்வான்ஸ் வாழ்த்துகள்' என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Scroll to load tweet…

அதில், ராஜூவ்காந்தியுடன் இறந்தவர்கள் பெயர் யாருக்கும் தெரியாது. அவர்களை பற்றி பேசுவதில்லையே. ஆனால், அவர் கொலைக்கு சம்மந்தப்பட்ட 7 பேர் மட்டும் எல்லாருக்கும் தெரிகிறது. தமிழ்நாட்டில் தமிழன் தமிழன் என்று பேசும் கட்சிகள் 7 பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்துவிட்டார்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும். கொலை குற்றவாளிகளை ஹீரோக்களாக ஆக்காதீர்கள். நீதிமன்றத்தால் குற்றவாளி என அவர்கள் நிரூபிக்கப்பட்டு என்று குறிப்பிட்டுள்ளார். இதில், செந்தில்குமாரின் டுவிட்டர் இணைப்பையும் சேர்த்துள்ளார். 

இதையும் படிங்க;- முதல்வர் பேசி 24 மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படியொரு சம்பவம்.. தெறிக்கவிடும் டிடிவி.தினகரன்..!