முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கட்சி உடையும் என்று பலர் சொன்னாலும், முன்பைவிட திமுக வலிமைகாக இருப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நகர்மயமாதல் நிகழ்ந்துள்ளது என்றும், இந்தப் பெயரைப் பெறுவதற்கு திராவிட முன்னோடிகள், ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க;-  திருட்டு தனமாக இயங்கி வந்த திமுக துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்... அதிகாரிகள் அதிரடி..!

மேலும் பேசிய அவர் திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க திராவிட சித்தாந்தத்தை பரப்ப ஆள் வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்ய காலம் ஸ்டாலினை அனுப்பி உள்ளது. கருணாநிதிக்கு பிறகு கட்சி சிதறும் என்றார்கள். ஆனால் உடையவில்லை. சிதறவில்லை. முணுமுணுப்பு இல்லை. கருணாநிதி உடன் ஸ்டாலினை ஒப்பிடவே ஒப்பிடாதீர்கள். யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள். 

ரோஜாவோடு ரோஜாவை ஒப்பிடாதீர்கள். அந்த ரோஜா வேறு. இந்த ரோஜா வேறு. கருணாநிதி வேறு உயரம். மு.க.ஸ்டாலின் வேறு உயரம். இரண்டும் வெவ்வேறு சிகரம். கருணாநிதிக்கு ஆரியம், டெல்லி மட்டும்தான் பிரதான எதிரிகள். ஆனால் தற்போது தமிழகம் துண்டாடப்பட்டுள்ளது. ஜாதியால், மதத்தால் கட்சிகளால், கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்களால் துண்டாடப்பட்டுள்ளது என ஆவேசமாக பேசியுள்ளார்.