உங்கள் எதிரிகளின் மரணத்தை கொண்டாடாதீர்கள், சில நாள் நண்பர்களும் இறந்துவிடுவார்கள் 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிறகு, பிரிகேடியர் (ஓய்வு) ஆர்.எஸ்.பதானியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

.

அவரது ட்வீட்டில், "உங்களுக்கு வணக்கம், ஜெய் ஹிந்த்." எனத் தெரிவித்து இருந்தார். ஆர்.எஸ்.பதானியாவின் இந்தப்பதிவிற்கு பதிலளித்து மரியாதை செலுத்தியவர்களில் பாகிஸ்தானின் முன்னாள் மேஜர் ஆதில் ராஜாவும் ஒருவர். அதில், "ஐயா, தயவுசெய்து எனது இதயப்பூர்வமான இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அடில் ராஜா எழுதியுள்ளார்.

"நன்றி, அடில். ஒரு சிப்பாயிடமிருந்து அதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. சல்யூட் யூ" என்று ஆர்.எஸ்.பதானியா எழுதியுள்ளார். அடில் ராஜா அதற்கு பதிலளித்துள்ள அடில் ராசா, "ஒரு சிப்பாயாக செய்வது கண்ணியமான விஷயம்" என்று கூறினார். "நிச்சயமாக, ஒரு சிப்பாயாக செய்வது கண்ணியமான விஷயம். மீண்டும், உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன், ஐயா. நமது பஞ்சாபி நாட்டுப்புறக் கதைகளில், "துஷ்மன் மரே தே குஷியன் ந மனவூ, கடாய் சஜ்னா வி மர் ஜானா" என்று சொல்வார்கள்: " உங்கள் எதிரிகளின் மரணத்தை கொண்டாடாதீர்கள், சில நாள் நண்பர்களும் இறந்துவிடுவார்கள் ”என்று அடில் ராஜா எழுதினார்.

அதற்கு பதிலளித்துள்ள பதானியா “மீண்டும் நன்றி அடில். நான் பஞ்சாபியைப் புரிந்துகொண்டு பேசுகிறேன். போர்க்களத்தில் நாங்கள் எதிரிகள். இனி, நண்பர்களாக இருக்க முடியாவிட்டால், ஒருவருக்கொருவர் நாகரீகமாக இருப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஆதில் ராஜா, “இதற்கு மேல் ஒத்துக்கொள்ள முடியவில்லை சார். #அமைதி ஒன்றே தர்க்கரீதியான முன்னோக்கி செல்லும் வழி. ஆசீர்வதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக இருங்கள் ஐயா என எழுதியுள்ளார்.

முன்னதாக, கூட்டுப் பணியாளர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் நதீம் ராசா மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா ஆகியோர் “ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவியின் துயர மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது” குறித்து தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.