ஈரோடு மண்டல திமுக மாநாடு 2018 இரண்டு நாட்கள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

இன்று காலை முதல் நடைபெற்று வரும் திமுக தொடங்கப்பட்ட திமுக மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை புரிந்துள்ளனர்.

இன்றைய தினத்தில்,திமுக ஈரோடு மண்டல மாநாட்டில்‪"இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி" என்ற தலைப்பில் மாலை 4 மணியளவில் மாநாட்டு பேருரை நடைப்பெற்றது.

திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த மாநாட்டை குறித்த தேடுதல் தான்,ட்விட்டரரில் ட்ரெண்டாகி உள்ளது.ட்விட்டர் தேடுதலில்,இந்திய அளவில் இன்று முதலிடத்தை பிடித்தது #dmkmaanaadu2018 என்பதே.....

திமுக  சார்பில், #dmkmaanaadu2018 என்று ட்விட்டரில் பதிவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாபெரும் அளவில்  வைரலாக பரவிய இந்த ஹேஷ் டேக்கை, இதுவரை 5000 கும் மேற்பட்டோர் retweet செய்து  உள்ளனர்.

அதற்கேற்றார் போல், திமுக ஈரோடு மண்டல மாநாட்டிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு  கிடைத்துள்ளது. திமுக  செயல்தலைவர்  ஸ்டாலின் அவர்களை காண,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை புரிந்துள்ளனர்.